வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (08:04 IST)

திரௌபதி படம் பார்த்த ஷாலினி சொன்னது என்ன ? – டிவிட்டரில் பகிர்ந்த இசையமைப்பாளர் !

திரையரங்கில் படம் பார்த்த ஷாலினி

திரௌபதி படம் பார்த்த நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி அஜித் படத்தின் இசையமைப்பாளரைப் பாராட்டியுள்ளார்.

ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் மற்றும் இதுவரை வெளியே தெரியாத இயக்குனர் என குறைந்த பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. கிட்டத்தட்ட 330 திரைகளில் வெளியான இந்த படம் முதல் நாளிலேயே தனது பட்ஜெட்டை விட அதிகமாக வசுலித்து விட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட இடைநிலை சாதி மக்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவு காரணமாக இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள தனது தம்பிக்காக சென்னையில் படத்தை குடும்பத்தோடு பார்த்தார் ஷாலினி அஜித். அப்போது படத்தின் இசையைப் பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜுபின் தனது டிவிட்டரில் ‘திரௌபதி படத்தின் இசையை ஷாலினி மேடம் வெகுவாக பாராட்டி என்னிடம் பேசிய போது... Thank you shalini madam’ என பகிர்ந்துள்ளார்.