ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (20:11 IST)

’’ஷகீலா மகிழ்ச்சியாக இல்லை’’…வாழ்க்கை வரலாறு பட நாயகி தகவல் !

நடிகை ஷகிலா என்ன செய்திருக்கிறார் என்பதைப் படித்தபோது அவருடைய கதை மக்களுக்கு கூற வேண்டியது என உணர்ந்தேன்.இப்படம் ஷகிலாவின் வாழ்க்கையில் நடந்த தெரியாததைக் கூறும். ஷகீலா மகிழ்ச்சியாகவே இல்லை என்று நடிகை ரிச்சா சந்தா கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் பிரபல மலையாள கதாநாயகர்களின் படங்களுக்கு இணையாக வசூலில் கொடிகட்டிப் பறந்தது ஷகிலாவின் படங்கள். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் அவர் படங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன.

தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தை ஷகீலா என்ற பெயரிலேயே பாலிவுட்டில் படமாக்கியுள்ளனர். இதில் ஷகீலாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா தத்தா நடித்துள்ளார்.

மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். ஏப்ரல் மாதமே ரிலீஸாக வேண்டிய படம் கொரொனா லாக்டவுனால் கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
 

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இளைஞர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷகீலாவின் கவர்ச்சி படங்களைப் பற்றிய கதையாக இல்லாமல் அவர் எதிர்கொண்ட சவால்களையும் துரோகங்களையும் இந்த படம் வெளிக்கொண்டு வரும் என சொல்லப்படுகிறது. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால் ஷகீலாவை பிரபல நடிகையாக்கிய மலையாள சினிமாவில் இப்போது இந்த படம் ரிலீஸாகவில்லையாம். ஆனால் அதன் பின்னர் டப் செய்யப்பட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஷகீலாவின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரிச்சா சத்தா கூறியுள்ளதாவது :

நான் ஒரு பத்திரிக்கையில் ஷகீலைப் பற்றி தி சென்சிபில் சூப்பர் ஸ்டார் என்று படித்திருக்கிறேன். அதேசமயம் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைப் படித்தபோது அவருடைய கதை மக்களுக்கு கூற வேண்டியது என உணர்ந்தேன்.இப்படம் ஷகிலாவின் வாழ்க்கையில் நடந்த தெரியாததைக் கூறும். ஷகீலா மகிழ்ச்சியாகவே இல்லை; அவரது வாழ்க்கை வரலாறு படம் வந்தால் அவர் மகிழ்ச்சி அடைவார் எனத் தெரிவித்துள்ளார்.