1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (08:23 IST)

ஜவான் படத்தில் அட்லி செய்த குளறுபடி.. அப்செட்டில் ஷாருக் கான்!

இயக்குனர் அட்லி தற்போது ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி.

இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் பதான் படத்தின் ப்ரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் ஜவான் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக் கான்.

இந்நிலையில் ஜவான் படத்தின் செலவில் சுமார் 14 கோடி அளவில் இழுத்துவிட்டு, வழக்கமாக தான் செய்யும் வேலையை பாலிவுட்டிலும் காட்டியுள்ளார் அட்லி. இது அறிந்த ஷாருக் கான் அட்லி மீது கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.