Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் மீண்டும் வா…. இந்த நடிகருக்கா இப்படியொரு ஆசை?


Cauveri Manickam| Last Updated: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (16:17 IST)
தலைக்கனம் இல்லாத நடிகர் என்று பெயரெடுத்தவர் அந்த நடிகர். பெரிய நம்பர் நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர ஆசைப்படுகிறாராம். 

 

 
தலைக்கனம் இல்லாத நடிகர் என்று பெயரெடுத்தவர் அந்த நடிகர். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட், வயதான வேடம் என எதுவாக இருந்தாலும் மனுசன் சும்மா பூந்து விளையாடுவார். நல்ல கதைகளாக இருந்தால், சம்பளத்தைக் கூட குறைத்துக் கொள்ளும் நல்லெண்ணம் கொண்டவர். 
 
தன்னுடன் நடித்த நடிகையைப் பிடித்துவிட்டால், அடுத்தடுத்த படங்களிலும் அவர்களை சிபாரிசு செய்வது அவர் வழக்கம். அப்படித்தான் அந்த இரண்டு நடிகைகளுடனும் அடுத்தடுத்து நடித்தார். அதைப்பற்றி கிசுகிசு வரவே, அவர்களுடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
 
பெரிய நம்பர் நடிகையுடன் அவர் நடித்த படம் சூப்பர் ஹிட். அந்த நடிகையைப் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என்கிறபோது, நடிகருக்கு மட்டும் பிடிக்காமல் இருக்குமா என்ன? மீண்டும் அவருடன் ஜோடி சேர ஆசைப்பட்டாராம். ஆனால், அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களில் அதற்கு வாய்ப்பு இல்லாததால், தான் வள்ளலாக நடிக்கும் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிகையை வரவைக்கலாம் என்றாராம். அத்துடன், அவரே நடிகையிடம் பேசி சம்மதமும் வாங்கிவிட்டாராம்.


இதில் மேலும் படிக்கவும் :