1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:42 IST)

திரைப்பட தொழிலாளர்களுக்காக சிறப்பு மருத்துவமனை: ஆர்கே. செல்வமணி அறிவிப்பு

திரைப்பட தொழிலாளர்களுக்கு என சிறப்பு மருத்துவமனை மற்றும் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இந்திய அரசின்‌ தொழிலாளர்‌ மற்றும்‌ வேலை வாய்ப்பு அமைச்சகத்தின்‌ நேரடிக்‌ கட்டுப்பாட்டின்‌ கிழ்‌ செயல்பட்டு வரும்‌ தொழிலாளர்‌ நல அமைப்பின்‌, தமிழ்நாடு மற்றும்‌ புதுக்சேரி மண்டலத்தின்‌ நல ஆணையர்‌ திரு.பழ.இராஜேந்திரன்‌ அவர்களால்‌ முற்றிலும்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ அவர்களது குடும்பத்தினர்கள்‌ மட்டும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனிப்பட்ட மருந்தகம்‌ இன்று 28/8/2020 காலை 10.00 மணி அளவில்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌ வளாகத்தில்‌ துவக்கி வைக்கப்பட்டது. நமது சம்மேளனத்‌ தலைவர்‌ ஆர்‌.கே.செல்வமணி அவர்கள்‌ தலைமையில்‌, மத்திய நல ஆணையர்‌ 
'திரு,பழ.இராஜேந்திரன்‌ அவர்கள்‌ கலந்து கொண்டு திரைப்பட தொழிலாளர்கள்‌ மருந்தகத்தை திறந்து வைத்து சிறப்புறை ஆற்றினார்‌. இந்த மருந்தகத்தின்‌ மூலம்‌ சுமார்‌ 85ஆயிரம்‌ திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ அவர்களது குடும்பத்தினர்கள்‌ பயன்பெறுவார்கள்‌ என்று நமது சம்மேளனத்தின்‌ தலைவர்‌ திரு.ஆர்‌.கே.செல்வமணி அவர்கள்‌ தெரிவித்தார்‌.
 
மேலும்‌, இந்த மருந்தகம்‌ அமைவதற்கு ஒப்புதல்‌ வழங்கிய தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்‌ மத்திய மந்திரி மதிப்பிற்குரிய திரு.சந்தோஷ்‌ குமார்‌ கங்குவார்‌ அவர்களுக்கும்‌, செயலாளர்‌ மதிப்பிற்குரிய திரு.ஹிரா லால்‌ சன்வாரிய அவர்களுக்கும்‌ மற்றும்‌ மதிப்பிற்குரிய இணை செயலாளர்‌ திரு. அஜய்‌ திவாரி அவர்களுக்கும்‌ மத்திய நல ஆணையர்‌ திரு.பழ.இராதேந்திரன்‌ அவர்களுக்கு நமது
சம்மேளனத்தின்‌ சார்பில்‌ மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.
 
மேலும்‌ இந்த நிகழ்ச்சியில்‌ தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனத்தின்‌. பொதுச்செயலாளர்‌. திரு.அங்கமுத்து, சண்முகம்‌, பொருளாளர்திரு.சுவாமிநாதன்‌, துணைத்தலைவர்கள்‌ திரு.தினா, திரு..ஸ்ரீதர்‌, திரு./ஷோபி பவுல்ராஜ்‌, திரு..செந்தில்குமார்‌, திரு..ராதாகிருஷ்ணன்‌, திரு. மனோஜ்குமார்‌, திரு. ராமலிங்கம்‌ மற்றும்‌ துணைச்செயலாளர்கள்‌ திரு சபரிகிரிசன்‌, திரு. ராஜா,  திரு.ரமணபாயு, திரு.சம்பத்குமார்‌, திருமதி. பிரியா, திரு.அசோக்‌ மேத்தா, திரு.சிக்கந்தர்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. திரைப்படத்‌ தொழிலாளர்‌ நலநிதி மருந்தகத்தின்‌ முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர்‌ திருமதி.ஸ்ரீலதா, ஆகியோர்களுக்கு எங்கள்‌
சம்மேளனத்தின்‌ சார்பில்‌ நன்றி தெரிவிக்கப்பட்டது.