வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (22:39 IST)

ஒரே ஒரு போஸ்ட் மூலம் ரசிகர்களை உஷார் செய்த ‘செம்பருத்தி’ கார்த்திக்

செம்பருத்தி சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் கார்த்திக் அந்த தொடரில் இருந்து சமீபத்தில் விலகிய நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் உஷார்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
செம்பருத்தி தொடரில் மூலம் தமிழக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்திக். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு பதிவை கூறியுள்ளார் 
 
அதில் தனக்கு இன்ஸ்டாகிராம் தவிர டுவிட்டர் பேஸ்புக் உள்பட எந்த ஒரு சோசியல் மீடியாவில் கணக்கு இல்லை என்றும் தனது பெயரில் போலியான கணக்குகள் உருவாகி வருவதாகவும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தனது பெயரில் உருவாகியிருக்கும் போலி பக்கங்களை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த போஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒரே ஒரு போஸ்ட் மூலம் ரசிகர்களை உஷார் செய்த ‘செம்பருத்தி’ கார்த்திக்