மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் புதுப்பேட்டை ! முழுவிவரம் இதோ!

Last Updated: புதன், 27 பிப்ரவரி 2019 (16:35 IST)
தமிழ் சினிமாவில் பல அற்புதமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். காதல் கொண்டேனில் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்ததன் மூலம்  தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அவர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 


 
செல்வராகவனின் ஒவ்வொரு படமும் ஏதாவதொரு பாடத்தை புகுட்டும் அந்த அளவிற்கு தன் கதையில் சிறப்பம்சங்களை உள்ளடக்கி படத்தை இயக்குவார்.  அவ்வாறு தரமான படங்களை கொடுத்த இவரை  தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்றே பலரும் அழைப்பார்கள். 
 
அந்தவகையில் கடந்த 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் புதுப்பேட்டை. கேங்ஸ்டர்ஸ் படம் என்றால் அடுத்த நொடி நினைவுக்கு வருவது புதுப்பேட்டை தான்.  இப்படத்தில் கொக்கி குமார் எனும் ரௌடியின் ஆரம்ப காலம் துவங்கி இறுதி கட்டம் வரை ஒவ்வொரு காட்சியையும் கச்சிதமாக செதுக்கியிருப்பார் செல்வராகவன். இதில் கொக்கி குமாரான தனுஷின் நடிப்பு அவ்வளவு மிரட்டலாக இருக்கும். 


 
இப்படத்தின்  இரண்டாம் பாகம் வெளிவராதா என்ற ஏக்கத்தில் இன்றும் ரசிகர்கள் உள்ளனர் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் செய்தி என்னவென்றால், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ஜி கே சினிமாஸில் இப்படத்தின் பிலே பேக் காட்சி போடப்படுகிறது. அதன்மூலம் புதுப்பேட்டை படத்தினை மார்ச் மாதம் 10, 12 போன்ற தேதிகளில் மீண்டும் திரையிடப்போவதாக அறிவித்துள்ளனர் 


இதில் மேலும் படிக்கவும் :