வாத்தி படம் வேற மாரி… பகாசுரன் டீம் வொர்க் – கிளாஷ் பற்றி செல்வராகவன்!
சகோதரர்களான தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரது படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக தனுஷுக்கும் செல்வராகவனுக்கும் இடையே உள்ள கருத்து மோதல் காரணமாகதான் செல்வராகவன் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செல்வராகவன் நடித்த பகாசூரன் என்ற திரைப்படம் அதே பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவது பற்றி பேசியுள்ள செல்வராகவன் “ரெண்டு படங்களையும் ஒப்பிடுவது அநியாயமானது. வாத்தி படம் மிகப்பெரிய ஸ்டார்களோடு உருவாகியுள்ள படம். ஆனால் பகாசுரன் ஒரு டீம்வொர்க் படம். இதில் என்னைத் தவிர, இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு முக்கியத்துவம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.