1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (17:31 IST)

’நானே வருவேன்’ படத்தின் முக்கிய பணி முடிந்துவிட்டது: செல்வராகவன் டுவிட்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் நானே வருவேன் என்ற திரைப்படத்தின் முக்கிய பணி முடிந்துவிட்டதாக சற்றுமுன் செல்வராகவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 விஜய்யின் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் செல்வராகவன் தனுஷ் நடிக்க உள்ள நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் கம்போசிங் பணி முடிந்துவிட்டது என்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிவு செய்துள்ளார் 
 
மேலும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளது அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனுஷ் ஜோடியாக இந்துஜா நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது