திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (21:37 IST)

ஏ.ஆர்.ரஹ்மானின் செல்பி புகைப்படம் வைரல்

இந்திய சினிமாவில் இசைக்கு என முதலில் ஆஸ்கர் விருதுகள் 2 வாங்கி நாட்டிற்குப் பெருமை சேர்ந்துள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ரஹ்மானின் சமீபத்திய செல்பி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பு , எழுத்து மற்றும் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் 99 சாங்ஸ். இப்பாடல்கள் ஏற்கனவே டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் கோப்ரா மற்றும் மூப்பிலா தமிழ் தாயே என்ற பாடலுக்கா தயாரிப்பில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது, விஜய்டிவியின் புகழ்பெற்றுள்ள பூவையர் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோருடன் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் மூப்பிலா தமிழ்த்தாயே ஆல்பம் பாடலில் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.