ஜி வி பிரகாஷுக்கு விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு… பாராட்டித் தள்ளிய இயக்குனர்!
ஜி வி பிரகாஷ் இப்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் நாயகியான காயத்ரி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இடிமுழக்கம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. இதுபற்றி இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டரில்இடி முழக்கம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆயத்தங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட படத்தின் ஒட்டு மொத்த காட்சிகளும் எடிட்டிங்கில் பார்த்த பிறகு, தம்பி ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு நடிப்பிற்காக விருதுகளும் வாழ்த்துகளும் உண்டு எனக் கூறியுள்ளார்.