திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (09:17 IST)

இலங்கை அகதியின் கதையை படமாக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சீனு ராமசாமி தனது அடுத்த படத்தை தொடங்க தயாராகிவிட்டார். சீனு ராமசாமியின் அடுத்த படம் இலங்கை தமிழ் அகதி குறித்த படம் என்றும் இலங்கையில் இருந்து அகதியாக சென்னை வந்த ஒரு இளைஞர் திடீரென காதலில் விழுந்ததால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது
 
இந்த படத்தில் விஸ்வா என்பவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய ’சாம்பியன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது