செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (15:32 IST)

சீனு ராமசாமி & ஜி வி பிரகாஷ் படத்தின் டைட்டில் இதுதான்!

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாம்.

கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இப்போதைக்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு இருப்பதால் அந்த படங்களை முடித்து விட்டுதான் தாணுவுக்கு தேதிகள் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேலன் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க உள்ளதாம். இந்த படத்துக்கு கலைமகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.