ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 1 நவம்பர் 2021 (20:40 IST)

பென்னிகுவிக் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல இயக்குனர்

பென்னி குயிக் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னிகுயிக் என்பது தெரிந்ததே
 
இவர் தனது சொந்தப் பணத்தை வைத்து பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் செயலாளர்களின் உதவியுடன் இந்த அணையை கட்டினார் என்பதும் இதனையடுத்து அவருக்கு இன்றும் அந்த பகுதி மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பென்னிகுவிக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க இருப்பதாக பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது