என்ன லுக்கு விடுகிற, கண்ணை நோண்டிவிடுவேன்: ஜூலியை மிரட்டும் சக்தி! - வீடியோ!

Sasikala| Last Updated: வியாழன், 13 ஜூலை 2017 (12:57 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். தற்போது 11 பிரபலங்கள் போட்டியாளர்களாக உள்ளனர். ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் அனைவரும் ஜூலியை டார்கெட் செய்தனர். பிறகு பரணியை ஒரு பைத்தியம் ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிக் பாஸ் குடும்பத்தினர், தற்போது ஜூலியை ஏதோ கெட்டவள் போன்று சித்தரித்து பேசுகிறார்கள்.

 
இந்நிலையில் மறுபடியும் அனைவரும் ஜூலிக்கு எதிராக திரும்பிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ப்ரொமோ வீடியோவில் சக்தி  ஜூலியை பார்த்து என்ன லுக்கு விடுகிற, லுக்கு விட்ட உன் கண்ணை நோண்டிவிடுவேன். உன் பார்வையே மாறிவிட்டது. அதை வேறு எங்காவது வச்சுக்க என்றும், பழிவாங்குவது ஜூலி கண்ணிலேயே தெரிகிறது என்கிறார்.
 
ஜூலியின் மறுமுகம் எங்களுக்கு தெரிந்து நாங்கள் பயந்துட்டோம் என்று சினேகன் ரைசாவிடம் கூறுகிறார். ஆராரோ ஜூலி  முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறார். நான் இன்று வரை ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து அவளிடம் பேசாததற்கு  காரணம் என்ன. பேசினால் அவள் நைட்டே தூக்கு போட்டு செத்துடுவா என்கிறார் சினேகன். இதை பார்க்கும்போது அனைவரும்  ஜூலிக்கு எதிராக பேசுவதை பார்த்தால் இதெல்லால் எழுதி கொடுத்து நடிப்பது போல தெரிகிறது. சமூக வலைதளங்களில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவரையே பிக் பாஸ் வீட்டில் டார்கெட் செய்கிறார்கள் என்றும், மேலும் கொடுத்த காசுக்கு மேலே இவர்கள் ஆக்டிங் செய்கிறார்கள் என சமூக வலைதலங்களில் கழுவி ஊற்றி வருகிறார்கள்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :