ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலான ரூ.15 கோடி பட்ஜெட் திரைப்படம்

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (21:46 IST)
இந்திய திரைப்படங்களான 'தங்கல்' , 'பாகுபலி' உள்பட பல படங்கள் தற்போது சீனாவில் நல்ல வசூலை செய்து வரும் நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆன 'சிக்ரெட் சூப்பர் ஸ்டார்' திரைப்படம் இரண்டே வாரங்களில் ரூ.500 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளது.

அமீர்கான், ஜாயிரா வாசிம் நடித்த இந்த படம் 'தங்கல் படத்தின் முதல்வாரயிறுதி வசூலையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவிற்கும் இந்த படத்தில் அமீர்கான், சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருப்பார்.

வெறும் ரூ.15 கோடியில் மட்டுமே தயாரான இந்த படம் ஏற்கனவே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.600 கோடி வசூல் செய்துவிட்ட நிலையில் தற்போது சீனாவிலும் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

webdunia

இதில் மேலும் படிக்கவும் :