வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (18:47 IST)

பூமி ஓடிடி ரிலீஸால் சிக்கலில் விநியோகஸ்தர்!

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவதால் அதை முன்பே பணம் கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் ஹாட்ஸ்டாரின் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி, நிதி அகர்வால், சதீஷ், தம்பி ராமையா, ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இதற்கு முன்னர் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் வாங்கியிருந்தது.

ஆனால் இப்போது பூமி ஓடிடியில் ரிலீஸாவதால் அவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இன்னமும் அந்த பணத்தை தயாரிப்பாளர் இன்னும் கொடுக்கவில்லையாம். ஆனால் ஸ்கிரீன் ஸீன் நிறுவனமோ பூமி படத்தை விற்ற மற்ற விநியோகஸ்தர்களுக்கு தங்கள் பணத்தைக் கொடுத்து மேலும் கையை சுட்டுக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் அடுத்தடுத்து ஜெயம் ரவியை வைத்து தயாரிக்க போகும் மூன்று படங்களுக்காகதான் என சொல்லப்படுகிறது.