Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பார்த்தா பச்ச புள்ள ஆன செய்வது வில்லதனம்!

Sasikala| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:56 IST)
தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் நடிக்கிறார். சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார்.

 
மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் பிரணிதா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெய், பிரணிதா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க  பலரிடம கேட்டு மறுத்துள்ளார்கள். ஆனால் பிரணிதாவோ இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தான் எதிர்பார்த்தேன் என கூறி  நடித்துள்ளார். 
 
அப்படி என்ன கதாபாத்திரம் என்று நினைக்கிறீர்களா? நாயகன் ஜெய்யை காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்ய வேண்டுமாம். பார்க்க அப்பாவி போன்று இருக்கும் பிரணிதா ஜெய்யிடம் வில்லத்தனம் செய்கிறாராம்.
 


இதில் மேலும் படிக்கவும் :