பத்திரிகையாளர்கள் முன் தம்பியிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்
இயக்குனர் மிஷ்கின் நடிப்பில் அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கிய 'சவரக்கத்தி' திரைப்படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்கள் முன், தம்பியிடம் மிஷ்கின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்
சவரக்கத்தி திரைப்படத்தின் போஸ்டரில் இயக்குனர் ஆதித்யா பெயரை விட மிஷ்கின் பெயர் பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது. இதை கண்டு தான் வருத்தம் அடைந்ததாகவும், இது இந்த படத்தை வாங்கியவரின் செயல் என்பதால் இதற்காக தம்பியிடம் தான் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் மிஷ்கின் தெரிவித்தார்.
மேலும் தனக்கு எப்போதும் தன்னுடைய படத்தின் விளம்பரங்களில் தன்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது என்றும் தான் சென்ற பிறகு 50 வருடங்கள் கழித்து தன்னை பற்றியும் , தான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும் என்றும் மிஷ்கின் தெரிவித்தார்.
இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தில் பூர்ணா சொந்தக்குரலில் சுத்தத்தமிழில் டப்பிங் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.