1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (11:20 IST)

சூர்யாவுக்கு சிறப்பு பட்டம் வழங்கிய சத்யராஜ்!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் ஆகியோர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவுக்கும் ஒரு படத்தை நடிகர் சத்யராஜ் வழங்கியுள்ளார்
 
இன்று சென்னையில் சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இந்த பிரஸ்மீட்டில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் 
 
இந்த  பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் சத்யராஜ், ‘ எங்கள் வீட்டுப்பிள்ளையாகிய சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என்று கூறினார். 
 
இதனை அடுத்து ’எதற்கும் துணிந்தவன்’  படத்தின் டைட்டிலில் புரட்சி நாயகன் சூர்யா என பதிவு செய்யப்படும் என்றும் இனி அடுத்தடுத்து வரும் சூர்யாவின் படங்களின் டைட்டிலில் புரட்சி நாயகன் என்ற பட்டம் குறிப்பிடப்படும் என்றும் கூறப்படுகிறது