1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (13:59 IST)

கைமாறியது ’சதுரங்க வேட்டை 2’ திரைப்படம்: ரிலீஸ் எப்போது?

அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2 என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக தயாராகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த படம் கைமாறி உள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படம் வரும் ஜனவரியில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த படத்தை நடிகர் மனோபாலா தயாரித்த நிலையில் தற்போது இந்த படத்தின் உரிமையை முத்து சம்பந்தம் என்பவர் பெற்றிருப்பதாகவும் அவர் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் முத்து சம்பந்தம் கூறியிருப்பதாவது
 
அடிப்படையில், நான் ஒரு தீவிரமான சினிமா ரசிகன், கிட்டத்தட்ட எல்லா திரைப்படங்களையும் தவறவிடாமல் தீவிரமாகப் பார்க்கிறவன். சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, ​​மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது.  
 
குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது. இருப்பினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும்  ஏமாற்றமடைந்தேன். நான் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியபோது, ​​உள்ளடக்கத்தில் சிறந்த  திரைப்படங்களைத் தயாரிப்பது மட்டும் அல்லாமல், மொழியியல் தடைகள் மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் படங்களை உருவாக்க வேண்டும்  என்று நான் பெரிதும் விரும்பினேன். 
 
அப்படியான ஒரு படைப்பு, ரிலீஸாகமல் இருப்பது கண்டு வேதனையுற்றேன். இறுதியில் சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட  முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க  ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி. இப்படத்தை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
ஒரு பிரபலமான பழமொழி உள்ளது - சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில், சரியான விஷயம் நிகழும். சதுரங்க வேட்டை 2 படத்தில் அது நடப்பதைக் கண்டு, நான் மனமார மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது, ​​பார்வையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விமர்சனப் பாராட்டுகளையும் வெல்லும் அனைத்து கூறுகளும இப்படத்தில் இருப்பதை, என்னால் எளிதாக உணர முடிந்தது. இப்போது, ​​படத்தை வெளியிட முயற்சியில்இறுதி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும்  ஜனவரி 2022 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.