1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (06:11 IST)

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, சைக்கோ: ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டிய நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார ராணி டாஸ்க் கொடுத்ததில் இருந்து அவருடைய அட்டூழியங்கள் அதிகரிக்க, போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கடும் எரிச்சலில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஐஸ்வர்யாவை திட்டாதவர்களே இல்லை என்று கூறலாம்
 
இந்த நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் ஐஸ்வர்யாவை சரமாரியாக திட்டி தீர்த்துள்ளார். பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ என்று கூறி பொன்னம்பலம் அண்ணனின் ஆக்சனுக்காக வெயிட்டிங் என்று பதிவு செய்துள்ளார்.
 
இந்த டுவீட்டுக்கு கீழே இந்த போட்டியில் கலந்து கொண்டு வெளியேறிய ரம்யா கூறியதாவது, 'ஐஸ்வர்யாவின் செய்கைகளை பார்த்து நான் மிகவும் அப்செட் ஆகியுள்ளேன். என்றும், நல்லவேளை நான் வெளியே வந்துவிட்டேன்' என்றும் கூறியுள்ளார். பார்வையாளர்கள் மட்டுமின்றி தற்போது ஐஸ்வர்யாவுக்கு திரையுலகினர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது