1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2017 (19:27 IST)

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்?

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, சசிகுமாரின் நெருங்கிய நண்பரான சமுத்திரக்கனியும் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். சமூகப் பிரச்னையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட இருக்கிறது.
 
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘கொடி வீரன்’ நேற்று ரிலீஸாகியிருக்கிறது. அடுத்ததாக ‘அசுர வதம்’ என்ற படத்தில் நடிக்கிறார் சசிகுமார். மருதுபாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜு முருகன் படத்தில் நடிக்கிறார் சசிகுமார்.