1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (07:03 IST)

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை இயக்குகிறாரா சசிகுமார்?

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன அன்னபூரணி படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் அவர் கைவசம் டெஸ்ட், தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை நடிகர் சசிகுமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சுப்ரமண்யபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கிய சசிகுமார் அதன் பின்னர் நடிகராக பிஸியாக வலம் வந்தார். சமீபகாலமாக அவர் படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதனால் அவர் இப்போது அவர் மீண்டும் இயக்குனராகும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் அவர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க முயற்சி செய்தார். ஆனால் இப்போது நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.