வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (14:55 IST)

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கப்போவது இவர்கள்தான் – வெளியானது தகவல் !

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் சசிக்குமாரும் பிஜு மேனனுன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் கதாபாத்திரங்களில் அஜித்தும் கமலும் அல்லது அஜித்தும் ரஜினியும் நடித்தால் நன்றாக இருக்கும் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இப்போது அந்த கதாபாத்திரங்களில் சசிகுமாரும், சரத்குமாரும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு படத்தில் தற்போது நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.