திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா ஒப்பந்தம் ஆன முதல் திரைப்படம்!
நயன்தாரா திருமணத்துக்குப் பிறகு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்து வந்தார்.
நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து சமீபத்தில் அவர்கள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டனர்.
இதனால் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஒய்நாட் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோருடன் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.