1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:47 IST)

ரஜினிகாந்த்-சசிகலா திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

ரஜினிகாந்த்-சசிகலா திடீர் சந்திப்பு: என்ன காரணம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் நேற்று மாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது அவருடைய மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களும் உடன் இருந்தார்கள். 
 
திரு ரஜினிகாந்த் அவர்கள் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்த நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனைப் பற்றியும் கேட்டறிந்தார். 
 
மேலும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கலை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு தனது நெஞ்சம் இருந்த வாழ்த்துக்களையும் புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது