வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:43 IST)

சர்கார் நாயகனின் 2019 காலண்டர் - அனல் பறக்கும் சமூக வலைத்தளங்கள்!

ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரைப் பற்றிய சின்ன விஷயத்தைக் கூட இவரது ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.  


 
இவரின் நடிப்பில் திரைக்கு வரும் ஒவ்வொரு படத்தையும் திருவிழா போல கொண்டாடுவார்கள் ரசிகர்கள். படத்தின் அறிவிப்பு தொடங்கி, ரிலீஸ் வரை எந்தெந்த வகைகளில் எல்லாம் அதனை டிரெண்ட் செய்ய முடியுமோ அத்தனை வழிகளையும் கையாள்வார்கள். 
 
அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அதாவது,  விஜய் மக்கள் இயக்கத்தின் 'பெங்களூர் தமிழ் பசங்க' எனும் குழுவினர், வரும் 2019-ம் ஆண்டிற்கான காலண்டரைத் தயாரித்திருக்கிறார்கள். 
 
அதில், விஜய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒன்று விடாமல் இடம் பெற்றிருக்கின்றன. அதாவது, விஜய்யின் திருமணநாள், பிறந்தநாள், பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளின் பிறந்தநாள், அவர் திரைத்துறைக்கு வந்த நாள் ஆகியவற்றை அந்த காலண்டர் ஹைலைட் செய்து காட்டுகிறது. 


 
மேலும் காலண்டரின் மறுபக்கத்தில், 'ஒரு விரல் புரட்சி' பாடலில் விஜய் இடம் பெறும் 'ஸ்டில்லும்' இடம் பெற்றிருக்கிறது. இந்தக் காலண்டரை தற்போது இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறார்கள் 'சர்கார்' நாயகனின் ரசிகர்கள்!