1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (20:16 IST)

வினு சக்ரவர்த்தியை மருத்துவமனையில் சந்தித்த சரத்குமார்

நடிகர் வினு சக்ரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
 

 
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக வினு சக்ரவர்த்தி நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வருகிறது. அவரை நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
 
அவரைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் வினு சக்ரவர்த்தியின் உடல்நலம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டார்.