1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:23 IST)

சரத்குமாரின் 150 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

கடந்த 1990ஆம் ஆண்டு ’புலன் விசாரணை’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் சரத்குமார் தற்போது 150 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் சற்று முன் சரத்குமாரின் 150வது திரைப்படம் குறித்த பஸ்ட்போஸ்ட் வெளியாகியுள்ளது.
 
நடிகர் சரத்குமாரின் 150வது படத்தின் டைட்டில் ’தி ஸ்மைல் மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷ்யாம் பிரவீன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு கவாஸ்கர் அபினேஷ் என்பவர் இசை அமைக்க ஸ்ரீ சரவணன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் என்பவர் படத்தொகுப்பு பணியைச் செய்கிறார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் ரஜினியை அடுத்து 150வது படத்தில் அடி எடுத்து வைக்கும் சரத்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது