மணிரத்னம் அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்…

cauveri manickam| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (12:24 IST)
மணிரத்னம் அடுத்து இயக்கவுள்ள படத்தில், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்தின் அடுத்த படம் என்ன? என்பதுதான் எல்லோரின் கேள்வியாகவும் இருக்கிறது. ராம் சரண் – அரவிந்த் சாமி இணையும் படத்தை இயக்குகிறார் என்றும், அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராயை இயக்கப் போகிறார் என்றும் பல தகவல்கள் உலா வந்தன. ஆனால், அது எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘தளபதி’, ‘ரோஜா’, ‘இருவர்’, ‘தில்சே/உயிரே’, ‘ராவண்/ராவணன்’ என ஐந்து படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இதுவரை சிறந்த ஒளிப்பதிவாளருக்காக 4 தேசிய விருதுகளைப் பெற்றுள்ள சந்தோஷ் சிவன், அதில் ‘இருவர்’ மற்றும் ‘தில்சே’ என மணிரத்னத்தின் இரண்டு படங்களுக்காக வாங்கியிருக்கிறார். இவர்கள் இணையும் ஆறாவது படமும் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :