1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (18:36 IST)

"வாரி குவித்த வசூல்" கோடி கணக்கில் லாபம் ஈட்டி கெத்து காட்டும் சந்தானம்!

சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 26ம் தேதி திரைக்கு வந்த A1 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சந்தானத்திற்கும் ஒரு நல்ல கம் பேக் கொடுத்தது. தற்போது இப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


 
A1 படம் தயாராகி பல மாதங்ககள் ஆகியும் ரிலீஸில் பல பிரச்னைகளை சந்தித்து வந்தது. இதனால் படத்தை இயக்கிவிட்டு வட்டி கட்டி வருவதாகவும் சந்தானம் பிரெஸ் மீட் ஒன்றில் தெரிவித்திருந்தார். எனவே படத்தின் ரிலீஸை எண்ணி காத்திருந்திருந்த படக்குழுவினருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 
 
இப்படம் வெளியாகி ரசிகர்களை தன் காமெடி கலாட்டாவால்  கவர்ந்திழுத்த சந்தானத்திற்காகவே அடுத்தடுத்த நாட்களில் குடும்பத்துடன் திரைக்கு படையெடுத்தனர் ரசிகர்கள். அந்தவகையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விநியோகஸ்தர்களுக்கு ரூ 3 கோடி வரை லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 
 
மேலும் இப்படம் இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பதால் இன்னும் லாபத்தை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம் எதிர்பார்த்தது போலவே இப்படம் அவருக்கு நல்ல கம் பேக்காக அமைந்துவிட்டது.