வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (11:44 IST)

மீண்டும் ஹீரோவாகும் சந்தானம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானம் மீண்டும் அதேபோல் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படம் விரைவில் தொடங்க உள்ளது.
காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் சீஸன் இது. வடிவேலு, கருணாஸ் வரிசையில் சந்தானம், விவேக்கும் இந்த வருடம் ஹீரோவாக நடித்தனர். சந்தானம் தெலுங்கில் ஹிட்டான மரியாத ராமண்ணா படத்தின் தமிழ் தழுவலான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தார். தெலுங்கிலும், இந்தியிலும் வெற்றி பெற்ற படம் தமிழில் சரியாகப் போகவில்லை.
 
அதனால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் முடிவை தள்ளி வைத்து ஒருசில படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க முன் வந்தார். அதேநேரம் நல்ல கதை அமைந்தால் ஹீரோவாகவும் நடிப்பேன் என கூறியிருந்தார். அதற்கேற்ப விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் நடித்த அஷனா சவரியே ஹீரோயினாக நடிப்பார் என கூறப்படுகிறது.