சைலண்ட்டா ஷூட் முடிக்கும் சந்தானம்& ரத்னகுமார்!
சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கிவரும் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதாம்.
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம். சமீபகாலமாக அவர் நடிப்பில் ஏ 1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் மட்டுமே ஓரளவு கவனம் பெற்றன.
இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்றில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படம் ஒரு டார்க் காமெடி படமாக உருவாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடி கிடையாதாம்.இந்நிலையில் படத்துக்கு வில்லனாக கஜினி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் பிரதீப் ராவத் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர்தான் வெளியானது. ஆனால் அதற்குள்ளாகவே படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை முடித்துவிட்டாராம் ரத்னகுமார். அடுத்த மாதத்தில் படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.