அஜித், விஜய் ரேஞ்சுக்கு படப்பிடிப்பை ஆரம்பிக்கும் சந்தானம்
கோலிவுட் திரையுலகில் தற்போது பெரிய ஸ்டார்கள் படங்களின் பாதி படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடக்கின்றது. அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'தளபதி 61' ஆகிய படங்கள் இதற்கு உதாரணமாக கூறலாம்
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் சந்தானம் நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ள 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பு எங்கே தொடங்குகிறது தெரியுமா? இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படமும் படமாகாத ஆர்மினியா என்ற நாட்டில் தொடங்கவுள்ளதாம். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த இந்த நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு பஞ்சமே இல்லையாம்
அஜித், விஜய் படங்கள் ரேஞ்சுக்கு வெளிநாட்டு படப்பிடிப்புடன் அதிக பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சந்தானம், ஆதித்தி போஹன்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படம் இவ்வருட கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.