நிக்காம கொட்டும் வசூல் மழை… சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. கடந்த வாரம் கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டுமே பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது வார வேலை நாட்களிலும் படம் நல்ல வசூலை செய்துள்ளது. இந்த 3 நாட்களில் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து, மொத்தம் 6 நாளில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகும் வரை இந்த கலெக்ஷன் தொடரும் என சொல்லப்படுகிறது.