செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:37 IST)

தன்னை இயக்கிய இரண்டு இயக்குனர்களோடு மீண்டும் இணையும் ஆர்யா!

ஆர்யா தன்னை இதற்கு முன்னர் இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இயக்குனர்களோடு மீண்டும் இணைய உள்ளார்.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. விரைவில் ஓடிடி தளத்தில் அல்லது திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் நடிக்க உள்ளாராம். அந்த படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல தன்னை வைத்து மகாமுனி இயக்கிய சாந்தகுமார் இயக்கத்திலும் ஒரு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தையும் அவரது ஷோ பீப்பிள் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.