Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணையும் பிரபல நடிகர்- நடிகை!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (21:00 IST)
நடிகை ஸ்ரீதேவி மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் கூட்டணியில் புதியப்படம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
மாம் மற்றும் பூமி திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவி அடுத்து பிரபல நடிகர் சஞ்சய் தத்-துடன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. 
 
கடந்த 1993 ஆம் ஆண்டு 'கும்ரா' என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவியும், சஞ்சய் தத்தும் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அதன் பின்னர் இப்போது 25 ஆண்டுகள் கழித்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். 
 
இந்த படத்தில் நடிக்க ஸ்ரீதேவி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா மற்றும் வருண் தவான் ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :