திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (14:55 IST)

விஜய்யை சந்தித்த நடிகர் சந்தீப் கிஷன்… தளபதி 67 ல் இருக்கிறாரா?

தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் சந்தீப் கிஷன்.

அதன் பின்னர் மாயவன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். இந்நிலையில் இப்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் மைக்கேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். நாளை இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் சந்தீப் கிஷன் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.

இது சம்மந்தமான புகைப்படத்தை சந்தீப் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.