Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘சண்டக்கோழி’ பார்ட்-2வுக்கு மூடுவிழா?

செவ்வாய், 16 மே 2017 (11:41 IST)

Widgets Magazine

விஷாலின் ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் இன்னும் தொடங்காததால், படம் ட்ராப்பாகி விட்டது என்று  பேசிக் கொள்கிறார்கள்.

 
விஷால் நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘சண்டக்கோழி’. செய்த செலவைவிட மூன்று  மடங்கு வசூலித்துக் கொடுத்தது இந்தப் படம். எனவே, இந்தப் படத்தின் பார்ட்-2வை எடுக்கலாம் என முடிவெடுத்தனர். லிங்குசாமி முதலில் எழுதிய கதை விஷாலுக்குப் பிடிக்காததால், வேறு கதையை எழுதச் சொன்னார். அடுத்ததாக எழுதிய  கதை விஷாலுக்கு பிடித்துப் போக, அந்த நேரம் பார்த்து நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் வந்தது.
 
தேர்தலில் ஜெயித்த விஷால், நடிகர் சங்க வேலைகளில் பிஸியாகி, தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தலைவராகி விட்டார். ஒரு பொண்டாட்டி கட்டுனவன் நிலமையே மோசமாக இருக்கும்போது, இரண்டு பொண்டாட்டி கட்டுனவன் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன? இரண்டு சங்கங்களின் பிரச்னைகளுக்காக நேரம், காலம் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
 
அவ்வப்போது யாராவது அவரிடம் ‘நீங்கள் நடிகர்’ என்பதை நினைவுபடுத்தி விடுகிறார்கள். அப்போதெல்லாம் ஒரு படத்தில் கமிட் ஆவதோடு சரி. எப்போது முடித்துக் கொடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது. ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’, ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, ‘நாளை நமதே’, ‘வில்லன்’ என கைவசம் 5 படங்கள் வைத்திருக்கிறார். இவற்றை எப்போது முடித்துக் கொடுப்பது, ‘சண்டக்கோழி’யை எப்போது தொடங்குவது? எனவே, அதற்கு மூடுவிழா தான் என அடித்துச்  சொல்கின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற ரஜினி - எதற்கு தெரியுமா?

சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு நடிகர் ரஜினிகாந்த் மாறு வேடத்தில் சென்று பாகுபலி2 ...

news

நடித்து நடித்து ஜீவாவுக்கு போரடித்துவிட்டதாம்…

கெஸ்ட் ரோலில் நடித்து நடித்து போரடித்துவிட்டதாக நடிகர் ஜீவா தெரிவித்து உள்ளார். ஜீவா ...

news

விஜய் - பிரபுதேவா மோதலா??

நடிகர் இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவருகிரார். இந்த படத்தில் மூன்று ...

news

சுச்சி லீக்ஸ் ; தொடர்ந்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்

தன்னுடைய பெயரில் பல டிவிட்டர் கணக்குகள் செயல்படுவதாகவும், அதில் ஆபாச படங்கள் ...

Widgets Magazine Widgets Magazine