பிக்பாஸ் சனம்ஷெட்டி அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய வகையில் விளையாடி வருபவர்களில் ஒருவர் சனம்ஷெட்டி என்பதும், எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லுத, எதற்கெடுத்தாலும் சண்டை என்ற நோக்கத்தில் அவர் விளையாடி வருவதாகவும் அவரால் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனால் சனம்ஷெட்டி மிக விரைவில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சனம் ஷெட்டிக்கு பிறந்தநாள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இன்று பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டி கொண்டாட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி வெளியேயும் சனம் ஷெட்டியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அவர் நடித்த எதிர்வினையாற்றும் என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று நாம் மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அந்த படத்தை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னரே இந்த டிரைலர் குறித்து சனம் பதிவு செய்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று மாலை வெளியாகும் எதிர்வினையாற்றும் என்ற படத்தின் டிரைலர் சனம்ஷெட்டியின் பிறந்தநாள் பரிசாக இருக்கும் என கருதப்படுகிறது