மாமனாரின் பிறந்தநாளுக்கு ஹாட்டான உடையணிந்து வந்த சமந்தா - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Last Modified சனி, 31 ஆகஸ்ட் 2019 (12:56 IST)
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படப்பிடிப்பு முதல் காதலித்து வந்தனர்.


 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  


 
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்ககளை பதிவேற்றம்  செய்து தென்னிந்திய சினிமாவை திரும்பார்க்க செய்திடுவார். அந்தவகையில் தற்போது சமீபத்தில் நாகசைதன்யாவின் 60வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சமந்தா  ஒரு ஹாட்டான ஜொலிக்கும் one-shoulder உடை அணிந்து வந்துள்ளார். இது பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதில் மேலும் படிக்கவும் :