1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (15:37 IST)

சமந்தாவின் யசோதா பட ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்!

நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் இரண்டு வாரங்களில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளை சமந்தா கண்டுபிடித்து எப்படி வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது டிசம்பர் 9 ஆம் தேதி யசோதா திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.