திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (07:22 IST)

சமந்தா & விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும், ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டே தொடங்கிவிட்ட நிலையில் ஒரு விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சமந்தாவின் உடல்நலப் பிரச்சனைக் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சமந்தா உடல்நலம் சரியாகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் குஷி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த ஷூட்டிங் இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள சமந்தா அடுத்து ஒரு வருடத்துக்கு சினிமாவில் நடிக்காமல் பிரேக் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.