வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (16:49 IST)

சமந்தா நடிக்கும் அடுத்த வெப் சீரிஸ்… மீண்டும் சர்ச்சை இயக்குனர்களோடு கூட்டணி!

நடிகை சமந்தா பேமிலி மேன் சீரிஸை அடுத்து மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளாராம்.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இதில் அதிகமாக தமிழ் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது சமந்தாவும் விஜய் சேதுபதியும்தான். ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடரையும் பேமிலி மேன் இயக்குனர்கள்தான் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.