தொழில் தொடங்கிய சமந்தா

Cauveri Manickam (Sasi)| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (11:25 IST)
திருமணத்துக்குப் பின் நடிக்க முடியாது என்பதால், புதிய தொழில் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார் சமந்தா.

 
 
நாகர்ஜுனா – அமலா தம்பதியின் மகன் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. ‘திருமணத்துக்குப் பின் நடிக்கக் கூடாது’ என நாக சைதன்யாவின் குடும்பத்தினர் உத்தரவு  போட்டிருக்கிறார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன் எனச் சொல்லி வருகிறார் சமந்தா.
 
இந்நிலையில், தெலங்கானாவில் கைத்தறி உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் சமந்தா. தன் நண்பர்களான வம்சி,  ஸ்ரீராம் ஆகியோருடன் இணைந்து தொடங்கியுள்ள இந்த நிறுவனத்துக்கு, அவர்கள் பெயரின் முதல் எழுத்தைச் சேர்த்து  ‘எஸ்.வி.எஸ். பார்ட்னர்ஸ்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஒருவேளை திருமணத்துக்குப் பின் நடிக்க முடியவில்லை என்றால்,  பொழுதுபோக்க இந்த நிறுவனம் துணையாக இருக்கும் என நினைத்து இந்தத் தொழிலைத் தொடங்கியுள்ளார் சமந்தா  என்கிறார்கள்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :