செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (09:23 IST)

நீண்ட நாட்களுக்கு பிறகு சமூகவலைதளத்தில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!

நடிகை சமந்தா சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்த சோஷியல் மீடியாவிலும் தன்னுடைய புகைப்படத்தைப் பகிரவில்லை.

நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் நடித்துள்ள யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் வழக்கமாக சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா கடந்த சில மாதங்களாக எந்தவொரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் அவர் தோல் சம்மந்தமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. அதனால் தான் அவர் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை என்று வதந்திகள் கிளம்பின. இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதிலும் முகம் தெரியாத வண்ணம் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.