வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (21:32 IST)

சமந்தாவா ? ராஷ்மிகாவா ? சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பதில் !

தன் தந்தை கிருஷ்ணாவில் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.

கீதா கோவிந்தம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பரசுராம் 
இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்துக்கு சர்காரு வாரி பாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மகேஷ்பாபுவுடன் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அதில், ஒன்று, உங்களுக்கு சமந்தாவை பிடிக்குமா ?  ராஷ்மிகாவை பிடிக்குமா என்ற்ய் கேட்டனர்.

அதற்கு அவர், இருவரையும் பிடிக்கும்.  இருவரும் திறமையான நடிகைகள் என தெரிவித்ததுடன், தனது புதுப்படமான சர்காரு வாரி பாட்டா  நல்ல  மெசேஜ் உடன் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படம் என தெரிவித்துள்ளார்.