Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மலர் டீச்சர் யூ ஆர் கிரேட்; பாராட்டிய சமந்தா


Cauveri Manickam (Abi)| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (15:39 IST)
சாய் பல்லவி நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகியிருப்பதால், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா பாராட்டியுள்ளார்.

 

 
அறிமுகமான ‘பிரேமம்’ படத்திலேயே அனைவரையும் கவர்ந்தவர், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி. மலையாளத்தைத் தொடர்ந்து, தெலுங்கில் ‘ஃபிடா’ படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். வருண் தேஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம், கடந்த 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
 
15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இது, ஒரு வாரத்திலேயே 40 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதில், பானுமதி என்ற கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி. எனவே, அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிவதோடு, வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கின்றன.
 
இந்நிலையில் சமந்தாவும் தன் பங்குக்கு சாய் பல்லவியைப் பாராட்டியுள்ளார். “அற்புதம் சேகர் கம்முலா. ‘ஃபிடா’ மிகவும் புத்துணர்வைத் தருகிறது. உண்மையான காதல். பட குழுவினருக்கு எனது பாராட்டுகள். படத்தில் சாய் பல்லவிதான் எல்லாமும். இனிமேல் ஒரு படத்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்றால், நிச்சயம் போய் பார்க்கலாம். அருமையான நடிப்பு, வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார் சமந்தா.


இதில் மேலும் படிக்கவும் :