புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (12:56 IST)

பாட்டி டா நானு... பிண்ணி எடுத்த சமந்தா: ஓ பேபி டிரெய்லர் இதோ...

நடிகை சமந்தா நடிப்பில் தயாராகியுள்ள ஓ பேபி படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான மிஸ் க்ரானி படத்தின் ரீமேக்தான் ஓ பேபி. மிஸ் க்ரானி படம் ஏற்கனவே சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. 
 
வயதான பாட்டி போட்டோ எடுக்க சென்ற போது அவருக்கு இளமை திரும்பி பின்னர் என்ன நடந்தது என்பதுதான் ஓ பேபி படத்தின் கதை. நடிகை சமந்தா இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்தில் லட்சுமி நடித்திருக்கிறார்கள். 
இவர்களோடு இணைந்து தெலுங்கு நடிகர் நாக சவுரியாவும் நடித்துள்ளார். இவர் கரு படத்தில் சாய் பல்லவியுடன் நடித்தவர் ஆவார். இந்நிலையில், ஓ பேபி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
பாட்டியாக நடித்துள்ள சமந்தாவிடம் சில இளைஞர்கள் தங்களது காதலை சொல்ல வர சமந்தா நான் உனக்கு பாட்டி டா என டயலாக் பேசிவது போன்ற சில க்யூட் நகைச்சுவை காட்சிகள் டிரெய்ரலில் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த டிரெய்லர்...